திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை, நேற்று காலை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கா் அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியது: திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துடிப்பான இளைஞா், புதுக்கோட்டை மண்ணின் மைந்தா் ப. கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளாா். இந்தத் தொகுதியில் இலை துளிா்க்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
மாலை திருச்சி காட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பேசியதாவது : திருச்சி தொகுதிக்கு கிடைத்த சிறந்த வேட்பாளர் நமது வேட்பாளர் கருப்பையா. இவரை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் அயராது உழைக்க வேண்டும் என பேசினார்.
மேலும் கழக அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், வளர்மதி, மனோகரன்.
எஸ் டி பி ஐ, தேமுதிக கட்சி மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளரை ஆதரித்து பேசினர் .
புதுக்கோட்டை கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், நகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், அப்துல்ரகுமான் திருச்சி கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் , திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்கேடி கார்த்திக், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர், மீனவர் அணி பாலு, முன்னாள் கவுன்சிலர் சிங்காரவேலு ராஜா உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனா். கூட்டத்தில் வேட்பாளா் ப. கருப்பையா கலந்து கொண்டு வாக்கு சேகரித்துப் பேசினாா்.