Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை பாதியில் முடித்தார்.

0

 

இன்று காலை தனது மகன் அருண் நேருவுக்காக கரூர் அருகே தோகைமலை கொசூரில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டு மருத்துவமனை சென்றார்.

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் துவங்கியபோது, நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.