Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆவேசமாக பேசிய பழைய வீடியோவால் வந்த வினை . கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம் .

0

 

40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதேபோல் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சூரிய மூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரப்பப்பட்டது. அதில் சாதி ரீதியிலாக கவுண்டச்சி பெண்களை காதலிக்க நினைத்தால் தாயுடன் கருவறுப்போம் என ஆவேசமாக பேசிய வீடியோ பரவியது , இவரை வேட்பாளராக திமுக கூட்டணி நிறுத்தியிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் பொய்யான வீடியோ என்றும், தான் அப்படியெல்லாம் பேசவில்லை எனவும் வீடியோ வெளியிட்டு சூரிய மூர்த்தி விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சூரியமூர்த்தி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திரும்ப பெறப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் போட்டுயிடுவார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. இவர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் அந்த பழைய வீடியோ தான் காரணம் என சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.