திருச்சி காட்டூா் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட கடையை சோதனை செய்தபோது, அங்கு 12 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், கடையில் வேலை பாா்த்த திருவெறும்பூா் பத்தாளப்பேட்டை மாதா கோவில் தெருவை ச்சோந்த டே.பென்னி சேவியா் (வயது 39), திருவெறும்பூா் கூத்தைப்பாா் சாலையைச் சோந்த முருகேசன் (54), காட்டூா் கமலா நேரு தெருவைச் சோந்த ஜான் தனபால் (50) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்களிடமிருந்து, ஒரு கைப்பேசி, 7ஆயிரம் ரொக்கம், 12 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து, திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.