Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பில் வெற்றி பெண்கள் 2024 விழிப்புணர்வு மாநாடு

0

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓரேப் கிறிஸ்டியன் அசெம்பிளி அறக்கட்டளை மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து “வெற்றி பெண்கள் 2024 பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடக்கமாக ஜெசி வரவேற்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் லீலா, 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா பானு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

மேலும் இம்மாநாட்டில் பெண்களின் உரிமைகள் பற்றி பேராசிரியர் முருகேஸ்வரி இயக்குனர், மற்றும் மகளிர் துறை தலைவர் பாரதிதாசன்பல்கலைக்கழகம், பெண்களின் உடல் நலம் குறித்து மருத்துவர் ஷர்மிலி பிரிசில்லா மதுரம், மூத்த நீரிழிவு சிசிக்சை மருத்துவர் மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ கண்காணிப்பாளர் மதுரம் மருத்துமவனை, பெண்களுக்கான சட்டத்தைப்பற்றி ஜெயந்திராணி வழக்கறிஞர், முன்னாள் உறுப்பினர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.
பெண் கல்வியைப் பற்றி கிறிஸ்டி சுபத்ரா கிரியா ஸ்டுடென்ட் அகடாமி,
பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி குறித்து ராணி சுரேந்தரன்
ஒருங்கிணைந்த சமூக நலன் அறக்கட்டளை , தொழில் முனைவோர் பயிற்றுநர்
சுபாஷினி உப்பிலி, துளிப் பிரைடல் ஸ்டுடியோ நிறுவனர் மற்றும் இயக்குநர், டால்மியாபுரம் பகுதியில் விதவைகளுக்கு தொழில் பயிற்சியளித்து வரும் ஜெயம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரோஸ்லின் ஷிபா
ஆகியோர் இம்மாநாட்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்து கருத்துரை யாற்றினார்கள்.

மாநாட்டில் சுய தொழில் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது, மேலும் விதவைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

இறுதியில் கன்மலை அறக்கட்டளையின் நிதி அறங்காவலர் சகாய ஹெலன் நன்றியுரை வழங்கினார் . இம்மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.