மகா சிவராத்திரியை முன்னிட்டு
ராதா திருக்கல்யாண வைபவம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் ராதா திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில் திருவானைக்காவலில் 3 நாட்கள் ஹோமம், திருக்கல்யாண உற்சவம், பன்னிசைதிருமுறை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முதல் நாளான 8-ந்தேதி மஹாகணபதி ஹோமம், ருத்ரஜபஹோமம், சங்கீத உபன்யாசம், தேவார இன்னிசை, சிவபூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2ம் நாளான நேற்று முன் தினம் மீனாட்சி திருக்கல்யாண வைபவம், நாம சங்கீர்த்தனம், பரத நாட்டியம் உள்ளிட்டவை நடைபெற்றன.
3ம் நாளான நேற்று
வரதராஜபுரம் சாய் பிரசாத் பாகவதர் தலைமையில்
ராதா திருக்கல்யாண வைபம், சிவநாமசங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் தொழிலதிபர் கணபதி உள்பட பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.