சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக மகளிர் தினவிழா இன்று மாலை நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களின் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் புனித சிலுவை கல்லூரி புணர் வாழ்வியல் துறை உதவி பேராசிரியர் அருட் சகோதரி லூர்து ஆரோக்கிய சாமி முன்னிலையில் , சாக்சீடு இயக்குனர் அருட் சகோதரி. பரிமளா வரவேற்புரையுடன், ஸ்ரீ வித்யா சட்ட பாதுகாப்பு அலுவலர் DCPO அவர்களின் தலைமையில் நிகழ்வு துவங்கியது.
ஸ்ரீரங்கம் AWPS K சத்யபாமா அவர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி 21வது மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு புரட்சிப்பெண் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், பெண் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோர் ஆகியோருக்கும் விருதுகள், பரிசுகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டனர்.
சாக்சீடு பணியாளர்கள் கோமதி அவர்களுக்கு சிங்கப்பெண் விருதும் வழங்கப்பட்டது.
வடுகர்பேட்டை, பட்டார்வோர்த் ரோடு, பொன்மலைப்பட்டி பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சாக்சீடு IRCA ஆலோசகர் அருட்சகோதரி. ஜெயசீலிப்ரியா நன்றி கூறினார்.
சுகப்ரியா, ஆர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.