Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பாஜக திருச்சி மாவட்ட இணை பார்வையாளர் ஆர் ஜி ஆனந்த் பங்கேற்பு .

0

திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் புனராவர்தன ஜீர்னோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை மிக சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நேற்று முன்தினம் காவிரி நதியில் இருந்து தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் அனைத்து வகை பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .

கும்பாபிஷேக நிகழ்ச்சியினை விழா குழு தலைவர் ஜி டி தினகர் , செயலாளர் சீனிவாச ராவ் மற்றும் விழா கமிட்டியினர் கண்ணன், வெங்கடாசலம், சிங்காரம்,சுரேஷ் ராம், சுப்பு,குணா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவின் திருச்சி பாராளுமன்ற இணை பார்வையாளர் டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

முடிவில் பொதுமக்கள் பக்தர்கள் அனைவருக்கும் பிரமாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது .

Leave A Reply

Your email address will not be published.