நடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரைபட பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை நடிகர், டைரக்டர் தியாகராஜன் ஆகியோர் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் இடையில் இந்த சந்திப்பால் நடிகர் பிரசாந்த் மற்றும் தியாகராஜன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய உள்ளனர் என கூறப்படுகிறது .