திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள மாநில செயற்குழு கூட்டத்தில் மீண்டும் மோடியை பிரதமராக்க உழைக்க வேண்டும் என தீர்மானம் .
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முழு ஆதரவு:.
மீண்டும் மோடியை பிரதமராக்க அயராது உழைக்க வேண்டும்
மதச்சார்பற்ற ஜனதா தள மாநில செயற்குழுவில் தீர்மானம்.
தேவகவுடாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்க அயராது பாடுபடுவது என்று மதச்சார்பற்ற ஜனதா தள மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மாநில செயற்குழு கூட்டம்
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது மாநிலத் தலைவர் காளப்பட்டி பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சொக்கலிங்கம் வழக்கறிஞர் முன்னிலை வகித்தார்.மாநிலச் செயலாளர் நிர்மல் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளரும், தேசிய செயலாளருமான என்.எஸ்.எம். கவுடா சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முனைவர் அப்துல் ரகுமான் தலைமையில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில துணை தலைவர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி சிறப்பாக செய்திருந்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
பிரதமர்மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த தேசிய தலைவர் தேவகவுடா முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொள்வது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததால் தேசிய தலைவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக சிலர் கட்சியை பிளவுபடுத்த முனைந்த செயலை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.தேசிய தலைவர் தேவகவுடா மீது மதச்சார்பற்ற ஜனதாதள தமிழக பிரிவு முழு நம்பிக்கை வைக்கிறது.அவரது கரத்தை வலுப்படுத்த துணை நிற்போம் என சூளுரைக்கிறது.மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது, ரேசன் கடைகளில் சிறு தானியம், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சலுகை விலையில் வழங்க வேண்டுமென தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது, விரைவில் சிறுபான்மையின மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில துணைத்தலைவர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி நன்றி கூறினார்.