திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் ஓட்டு மட்டும் இனிக்கிதா முத்தரையர் என்றால் கசக்குதா என கோஷம் எழுப்பியவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் போலீஸ்காரரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றக் கழக மாநில துணைத்தலைவர் திருப்பூர் சங்கர் தலைமையில் சிலர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி கொண்டு கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன் ஆகியோர் முன்பு ஓட்டு மட்டும் இனிக்கிதா முத்தரையர் என்றால் கசக்குதா என கோஷங்கள் எழுப்பினர் .
இதைப் பார்த்த கண்டோன்மெண்ட் போலீஸ்காரர் அரவிந்த் அந்த நபர்களை அமைதியாக வருமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் அவருடன் சேர்ந்த நான்கு பேர் போலீஸ்காரரை திட்டி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரவிந்த் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் சங்கர் மற்றும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.