பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் .
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் சார்பாக அதிக அளவு கல்லூரிகளில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து கொடுத்துமைக்காகவும் உடலியல் சார்ந்த விழிப்புணவு நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தியமையையும் பாராட்டி
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், திருச்சி யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் இரா.குணசேகரன் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழையும், கேடயமும் வழங்கி கௌரவித்தார்.