Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மறைந்த அதிமுக நிர்வாகி கலைமணி நாடார் உருவப் படத்தினை திறந்து வைத்த மாவட்ட செயலாளர் குமார் .

0

'- Advertisement -

 

அதிமுக திருச்சி மாநகர நிர்வாகி மறைந்த கலைமணி நாடார் படத்திறப்பு விழாவில், மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம்.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மலைக்கோட்டை பகுதி கழகத்திற்குட்பட்ட, 9 வது வார்டு வட்ட பொருளாளர் கலைமணி நாடார் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

மறைந்த கலைமணி படத்திறப்பு விழா, திருச்சி சிந்தாமணி அருகே உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த கலைமணிக்கு, அதிமுக மற்றும் நாடார் தெரு பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் அவரது உருவ படத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழக செயலாளர் அன்பழகன், வட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மலைக்கோட்டை பகுதி கழக அவைத்தலைவர் குவைத் மனோகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.