Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தண்ணீர் என ஆசிட் குடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.

0

 

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2022 வரை இடம் பெற்று வந்த மயங்க் அகர்வால் தற்போது அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் விமான பயணத்தின் போது குடிநீர் என நினைத்து ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆசிட் வாயில் பட்ட உடன் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார். எனினும், எரிச்சல் அதிகமாக இருக்கவே அவரை விமானத்தில் இருந்து இறக்கி அகர்தலாவில் உள்ள ஐஎல்எஸ் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதித்து உள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி ட்ராபி தொடரில் கர்நாடகா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் மயங்க் அகர்வால். திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா சென்றார். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின் சக வீரர்களுடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் ஏறினார்.

விமான பயணத்தின் போது குடிநீர் வேண்டும் என கேட்டு இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் இருந்து அவர் சிறிதளவு அருந்தியதும் கடும் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார். எனினும், எரிச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக விமானத்தில் இருந்து மயங்க் அகர்வால் இறக்கபட்டார். அவருடன் கர்நாடகா மாநில அணியின் மேலாளரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அகர்தலாவில் உள்ள ஐஎல்எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது நடந்து வரும் 2024 ரஞ்சி ட்ராபி தொடரில் மயங்க் அகர்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்று 460 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2022 – 23 ரஞ்சி ட்ராபி சீசனில் அதிக ரன் குவித்த வீரராக மயங்க் அகர்வால் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள அவர் அதில் 1488 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.