Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையின் புதிய கிளையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

0

 

திருச்சி மேல புலிவார்ரோட்டில்

கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மதுரை ரோட்டில் தமிழ்ச் சங்கம் எதிரில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை மிகப் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாணபிரியாணி குழுமத்தின் நிறுவனரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவருமான கே.எம்.எஸ் ஹக்கீம் வரவேற்றார்.
விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி புதிய கிளையை திறந்து வைத்து வாழ்த்தினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன், முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலிம், அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன்,மாநகரப் பொருளாளர் ஏ1 ஹோட்டல் ஆறுமுகம்,மாநிலத் துணைத் தலைவர்கள் ரெங்கா சீவல் ரங்கநாதன், என்.டி.கந்தன், தில்லை மெடிக்கல் மனோகரன்,சங்கரன்,மாநில இணைச்செயலாளர் தீபக்ராஜா,வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம்,மாவட்ட செயலாளர் கே.எம்.எஸ்.மொய்தீன் மாவட்ட செய்தி தொடர்பாளர் திருமாவளவன்,சத்திரம் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்கம் ராயல் சேட்டு,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபிபூர் ரகுமான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது ,முகமது ராஜா,எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் தமிழுக் அன்சாரி,பாஜக மாவட்ட துணைத் தலைவர் தொழிலதிபர் ஜெயகர்ணா, ராக்போர்ட் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் தொழிலதிபர் லட்சுமி நாராயணன்,சத்தர் வழி தர்கா டிரஸ்டி அல்லா பாஸ்,,கனி பிராய்லர்ஸ் கனி,திருச்சி மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தன்,வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அப்பாதுரை ராவுத்தர்,
எஸ்.எம்.ஜெயிலா மட்டன் மற்றும் சிக்கன் ஸ்டால் முகமது பிலால் மற்றும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.