Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொலை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு .

0

 

திருச்சி சோமரசம்பேட்டையில் கடந்த 2021 அன்று சிவகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி யான காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் காவல் ஆய்வாளர் உதயகுமார் மீது பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை தலைவர் எடுக்க வேண்டும் நீதிபதி உத்தரவு.

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவு.

திருச்சி சோமரசம்பேட்டை அருகில் உள்ள செங்கதிர்சோலை மைதிலி தாக்கல் செய்த மனுவில்,

திருச்சி எனது கனவர் சிவா என்கிற சிவக்குமார் முன் விரோதம் காரணமாக கடந்த நவம்பர் 2021 அன்று அடையாளம் தெரிந்த நபர்களால் கொலை செய்யப்பட்டார் .

இந்த சூழலில் கொலையாளிகளை கைது செய்யும் வரை எனது கணவர் சிவாவின் உடலை, வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

அப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் , வருவாய்த்துறையினர் வந்து கொலையாளிகள் அனைவரையும் கைது செய்வோம் என்று உறுதி கூறினார் இதை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட எனது கணவரின் உடலைப் பெற்று அடக்கம் செய்தோம்.

சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்த வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் முக்கிய குற்றவாளிகளான (ஏ3 P.கதிர்வேல் மற்றும் ஏ4 ரவி முருகையா ) ஆகிய இரண்டு பேர் விடுவிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதில் விசாரணை அதிகாரி ஒருதலைப் பட்சமாக செயல்பட்டுள்ளார் .உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை .
எனவே விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகை ரத்து செய்ய வேண்டும் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது, மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில்
1 முதல் 4 குற்றவாளிகள். என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் குற்றப்பத்திரிகையில் 4 பேர் இல்லை.

திருச்சி சோமரசம்பேட்டை காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முறையாக நடத்தாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் எனவே தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்,
விசாரணை முடிந்து இறுதி அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி, ஏ3 மற்றும் ஏ4 தொடர்பு பற்றி சாட்சிகள் யாரும் பேசவில்லை
எனவே, சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,இருவர் பெயர்கள் நீக்கப்பட்டன என கூறினார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் இந்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யவில்லை. பல்வேறு குறைபாடுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எனவே சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மேலும் இந்த வழக்கை திருச்சி கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்த சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் உத்தரவிட வேண்டும்.

விசாரணை அதிகாரியின் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவரை பணியில் இருந்து நீக்குதல் போன்ற கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.