திருச்சி சிந்தாமணியில்
ஆபாச படங்களை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலன்.
திருச்சி காஜாப்பேட்டை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37 ).இவர் திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருடன் கடந்த 8 வருடமாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து அந்தப் பெண் கார்த்திகேயனுடன் இருந்த தொடர்பை துண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அந்த பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளம் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது .இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .
அதன் பேரில் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.