விஜயகாந்த்திற்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு நிறுவனத் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் .
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முகக் கலைஞர்கள் நலவாழ் அமைப்பு கோரிக்கை
இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது,
திரைப்பட நடிகராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் திறம்பட மக்களுக்கு சேவையாற்றி வந்தவர், சினிமா மற்றும் அரசியல் துறையில் ஜாம்பவான் என்று பெயரெடுத்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இன்று பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், திருச்சி மாவட்டத்தின் தலைவர் அன்வருதீன், திருச்சி மாவட்டத்தின் செயலாளர் ஐயப்பன் ஆகியோரின் ஏற்பாட்டில், மாநில அமைப்பு செயலாளர் முருகன், மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிக்குமார், திருச்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வேலுச்சாமி, திருச்சி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பாளர் இக்பால், வனிதா, ஜெலஸ்டின், பாண்டீஸ்வரி மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,
திருவுருவப் படத்திற்கு வருத்தத்துடன் மலர் தூவி வணங்கினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் சமூக சேவைகளும் சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் ஜாம்பவான் என்ற பெயர் எடுத்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருச்சியில் திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என்று நிறுவனத் தலைவர் வேல்முருகன் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.