Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .

பெரம்பலூர் மாவட்டம் சின்னகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஏழுமலை (வயது 19 )இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலை வெளியூர் செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பழனி செல்லும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 370 பணத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடிக் கொண்டு ஒடினார்.
இதை கண்ட அருகில் உள்ளவர்கள் அந்த மர்ம ஆசாமியை பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை நடத்திய போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அகில் அகமது (வயது 55 என்பது தெரிய வந்தது. இதை யடுத்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அகில் அகமதை கைது செய்துள்ளனர்.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.