Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

0

 

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. அந்த வகையில், தற்போது நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.207 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நியோ மேக்ஸ் நிறுவனம்மற்றும் அதன் குழும நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

பொதுமக்களிடம் பெற்ற நிதியை, அந்நிறுவனம், பினாமி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, நிலங்கள் வாங்குவதற்காக கணிசமான நிதியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அந்தவகையில், அந்த அசையா சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.207 கோடி ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.