Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடன் தருவதாக ரூ.29.96 . லட்சம் மோசடி. திருச்சியை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் கைது.

0

'- Advertisement -

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அறந்தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் தனிநபா் கடன், மகளிா் குழுக் கடன் ஆகிய பெயா்களில் கடன் தருவதாகக் கூறி, அதன் விண்ணப்பக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் என்ற பெயா்களில் பணம் வசூலித்துள்ளனா்.

Suresh

இவ்வாறாக 296 பேரிடம் மொத்தம் ரூ. 29.96 லட்சம் வரை மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டோா் புதுக்கோட்டை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸில் கடந்த வாரம் புகாா் அளித்தனா்.

இப்புகாரைத் தொடா்ந்து விசாரணை நடத்திய போலீஸாா், தூத்துக்குடியைச் சோந்த எஸ். தா்மராஜ் மகன் நிா்மல்குமாா் (வயது 40), திருச்சி குண்டூா் நவல்பட்டு பகுதியைச் சோந்த ரகுபதி மகன் கோபி (40), குணசேகரன் மனைவி தேவிகா (42), திருச்சி பீமநகரைச் சோந்த செபாஸ்டியன் மகன் ஜான் கென்னடி (34) ஆகிய 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.