Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நன்றி மறந்தவர் விஜய். அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது . நடிகர் விஜய் நல்லவர் கிடையாது. பிரபல ஜோசியர் பேட்டி’

0

 

இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருப்பவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக பெரும் ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை லியோ வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் லியோவுக்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது.

லியோ படத்தை முடித்திருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை, தாய்லாந்தில் நடந்த ஷூட்டிங் தற்போது துருக்கியில் நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த பல வருடங்களாகவே பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதுகுறித்து அவர் வாய் திறந்து எதுவும் பேசவில்லை என்றாலும் அவரது சமீபத்திய செயல்பாடுகள் அனைத்தும் அரசியல் என்ட்ரியையே குறிக்கிறது. உதாரணமாக 234 தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டியதையும், அவர்கள் மத்தியில் விஜய் பேசியதையும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி விஜய்யை சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் சுற்றிக்கொண்டிருந்தாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தன்னை ஆளாக்கிய தந்தையை கண்டுகொள்ளவில்லை; தனது கரியரின் ஆரம்பத்தில் உதவிய விஜயகாந்த் இப்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரை சென்று நேரில் பார்க்கவில்லை போன்ற விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில் விஜய் நல்லவர் இல்லை என்று ஜோதிடர் சீதா சுரேஷ் என்பவர் பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “2024ல் விஜய் அரசியலுக்கான அடித்தளத்தை அமைப்பார். நிறைய சர்ச்சைகளை சந்திப்பார். ஆனால் ஒன்று அவர் நல்லவர் இல்லை. அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது.

கண்டுகொள்ளவில்லை: விஜய்யை அவரது அப்பா வளர்த்துவிட்டார். அவரை இவர் திரும்பி பார்த்தாரா. விஜய் வளரும் போது அவருக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து சேர்ந்து நடித்தார். இப்போது விஜயகாந்த்தின் மகன் வாய்ப்பு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். எங்கே விஜய்யை ஒரு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

அந்த அளவுக்கு எல்லாம் அவர் நல்லவர் இல்லை. அவர் ரொம்பவே நன்றி மறந்தவர். படத்தில் வேண்டுமென்றே அரசியல் வசனம் பேசுவார். படம் ரிலீஸாகாமல் சிக்கலை சந்தித்தால் அதே அரசியல் தலைவரிடம் போய் நிற்பார்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.