Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: என்னை கொல்ல முயன்றதால் நான் முந்தி கொண்டேன் . பிரபல ரவுடி பரபரப்பு வாக்குமூலம் .

0

 

என்னை கொல்ல முயன்றதால் நான் முந்திக் கொண்டேன். பிரபல ரவுடி வாக்குமூலம் ‘

திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன்
(வயது 51).இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில் வீடுகளுக்கு மருத்துவ சேவைக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். முன்னாள் பாமக நிர்வாகியான இவர் மேலும் கார் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.( குறிப்பாக ராமஜெயம் கொலை வழக்கு )
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முகமூடி அணிந்த 3 பேர் அலுவலகத்துக்குள் புகுந்து பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு உட்படுத்தி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் திடீர் நகரை சேர்ந்த லட்சுமணன் (வயது 38), பாரதியார் நகரை சேர்ந்த ரியாஸ் ராஜ் (24) அப்துல் கபூர் பஷீர் (29) தஞ்சாவூர் மகா தேவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (30)ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர்களில் ஒருவர் பிரபுவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்பதும் மற்ற 3 பேரும் கூலிப்படையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
மேலும் இந்த கொலையில் திருவரம்பூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் (32) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.சில ஆண்டுகள் பிரபுவிடம் டிரைவராக வேலை பார்த்த அப்பு பின்னர் தனியாக இந்த தொழிலை செய்து வந்தார். இதனால் பிரபுவுக்கும் அப்புவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
இதனால் அப்பு திட்டமிட்டு கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பிரபல ரவுடி அப்புவை தனிப்படை போலீசார் துவாக்குடி செக்போஸ்ட் அருகில் வைத்து நேற்று மாலை பிடித்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் என்னை கொல்ல முயன்றதால் பிரபுவை திட்டம் தீட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் அப்புவை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரபு ரெட்டைவாய்க்கால் பகுதியில் ஒருவரை மிரட்டி பணம் பறித்தார்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த பிரபு அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவரும் அப்புவும் கூட்டு சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.