திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனை கூட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த தீர்மானம் .
திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருச்சி மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
மாநில செயலாளர் அல் அமீன், பேச்சாளர் ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில்
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மூன்று மாத கால செயல் திட்டமாக ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்’ நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
கூட்டத்தில் மாநில செயலாளர் அல் அமீன் பேசுகையில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களிடம் வீரியமாக கொன்டு சேர்க்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் சேர்த்து இச்சமுதாயத்தை அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தின் சார்பாக ‘அல்-ஹிக்மா’ அகாடமி என இலவச அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவங்கப்பட்டதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜாஹீர், பொருளாளர் லால் பாஷா, துணை.தலைவர் காஜா, துணை செயலாளர்கள், உமர், பிலால், கனி, மாலிக் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.