இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து போராட்டம் . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி உறையூர் அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவர் அய்யாக்கண்ணுசிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள்,
மேகராஜன்,
வழக்கறிஞர் முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய விவசாய சங்கத் தலைவர்களை சென்னைக்கு அழைத்து வருகிற 21ந்தேதி சென்னையில் பேசி, இந்தியா முழுவதும் உள்ள எல்லா விவசாயிகளையும் டெல்லிக்கு அழைத்து கீழ்கண்ட கோரிக்கைகளுக்கு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி
இரண்டு மடங்கு லாபகரமான விலையை விவசாய விளை பொருட்களுக்கு பெறுவது.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து
கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
விவசாய உணவு பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது
கோதாவரி – காவேரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மாதம் ரூ.500 கொடுக்கும் விவசாய உதவி தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டுமென்றும். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவது என்றும்.
குளித்தலையிலிருந்து குமாரவேலு தலைமையில் சென்னைக்கு வருகின்ற 25.ந்தேதி புறப்படும் நடை பயணத்தில் கலந்துக்
கொள்ளுவது
விவசாயிகள் போராட கூடாது போராடினால் குண்டர் சட்டத்திலும், விவசாய சங்கத் தலைவர்கள் மேல் 30க்கு மேல் கேஸ் போடுவதை கண்டித்து காவல்நிலையத்தில் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.