எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தவர் கைது
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மர்ம நபர், அந்த சிலையின் இடது கையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதையறிந்த ரெட்டி மாங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் புள்ளம்பாடி
ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவக்குமார் தலைமையில் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாரும் நேற்று முன்தினம் இரவு அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இது குறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இப்பகுதி அதிமுக கிளை செயலாளர் அம்மாசி என்பவர் உடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டி மாங்குடி நடுத் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் மகன் செந்தில்குமார்
வயது (வயது 47) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
செந்தில்குமார் சிறுகனூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.