திருச்சி ஸ்ரீரங்கத்தில்
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் திடீர் மரணம்.
திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவானைக்காவல் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது காலை 9 மணி அளவில் ராஜாராமுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை திருச்சி சென்னை பைபாஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் மதியம் 12.30 மணி அளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த ராஜாராமுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இதில்2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இளைய மகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அவரது உடல் இந்த காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து
இன்று பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் சொந்த ஊரான முருங்கைப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.