Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தில்லைநகர் சங்கீதா ஹோட்டலில் தீ விபத்து. வீடுகளை ஹோட்டல்களாக மாற்றியதே விபத்திற்கு காரணம். நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? மநீம கிஷோர் குமார் கேள்வி.

0

'- Advertisement -

 

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடைகளாக மாறும் வீடுகள்.
திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடந்த தீ விபத்து.

ஐந்து பேர் தங்க கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீட்டை தங்கள் வியாபார தேவைக்காக நூற்றிற்கும் மேற்பட்டோர் கூட கூடிய வணிக கூடமாக மாற்றியது சரியா….? தவறா…?

இந்த கேள்விக்கு முன்பாக இவ்வாறு வீடாக இருந்ததை பன்னி குட்டிக்கு பல் விளக்கி, பவுடர் அடித்த கதையாக.
இன்டீரியர் டெக்கரேசன் மட்டுமே செய்து எவ்வித பாதுகாப்பு வசதியையும் மேம்படுத்தாமல் வீட்டை கடைகளாக மாற்றும் பொழுது அங்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்ப்பது….?

அப்பொழுது மட்டும் சில சம்பிரதாய கைதுகள் அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த மாதிரியான சம்பவங்கள் கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடங்கி பல உதாரணங்களை நாம் மேற்கோள்காட்டலாம்.

ஆனால் இன்று [02.10.2023] ந் தேதி மதியம் 01.00 மணியளவில் திருச்சி தில்லைநகரில் முதல் கிராசில் இயங்கி வரும் ஸ்ரீசங்கீதா ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக எவ்வித உயிரிழப்பும் இல்லை.

மேற்படி சங்கீதா ஹோட்டல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு இல்லை என இப்படியாக நாம் கடந்து விட முடியாது. காரணம் இந்த ஹோட்டல் அமைந்துள்ள இடமும் இதற்கு முன்பு வீடாக இருந்தது தான். மேலும் இந்த ஹோட்டலுக்கு வரும் நூற்றிற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சமைக்க போதிய சமையல் கூடம் இல்லை என்ற குற்றசாட்டு எழுவதுடன். போதிய பார்கிங் வசதி இல்லை என அடுக்கடுக்கான குற்றசாட்டு எழுகிறது.

இத்தனைக்கும் இந்த ஹோட்டலுக்கு எதிரிலும், அருகிலும் மருத்துவமனைகள் உள்ளன.

விபத்து சற்று வீறியமானால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

அப்படியானால் எப்படி இந்த ஹோட்டல் இயங்குகிறது என்று தானே கேட்கிறீர்கள். அதை தான் நானும் அரசு அதிகாரிகளை பார்த்து கேட்கிறேன். பதில் வருமா….? விசாரணை நடக்குமா….? நடவடிக்கை எடுக்கப்படுமா….?

பொதுமக்கள் மீதான அதிகாரிகளின் அக்கறையை தான் பார்ப்போமே.

என மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளரும்,
வழக்கறிஞருமான Ra.கிஷோர்குமார் வெளியீட்டு உள்ள அறிக்கையில் உள்ள அருகில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.