திருச்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் அரசு நேதாஜி ஏற்பாட்டில் தூய்மை பணி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜக சார்பில் இன்று காலை தூய்மை பாரதம் நிகழ்ச்சி.
திருச்சி மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக காந்தி மார்க்கெட்டில்
காந்தி சிலை அருகில் மாவட்ட செயலாளர் ரஜேசேகரன் தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.அப்பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை நேசவாளர் பிரிவு மாநில செயலாளர் என்.எஸ்.அரசு நேதாஜி சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஓண்டிமுத்து, தண்டபாணி, இல.கண்ணன், பார்த்திபன், ஜெ.கே.பி., கே.பி.கண்ணன், பட்டாசு கண்ணன், சக்திவேல், நந்தா, மண்டல் தலைவர்கள் அருண், சாய் பிரசன்ன, ஸ்ரீதர், அயோத்தி ஜெகதீசன்
மற்றும் தேசிய,மாநில, மாவட்ட, மண்டல அணி,பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.