Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: உரிமைத்தொகை குறித்து ஏந்த அறிவிப்பும் வரவில்லை, தினக்கூலி செல்லும் பெண்கள் ரேஷன் கடை முற்றுகை.திமுக கவுன்சிலர் தரப்பு அலட்சியம் .

0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை,வீடு வீடாக வந்து ஆவணங்களை சரி பார்க்கவில்லை,
மகளிர் உரிமை தொகைக்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டி திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நியாய விலை கடை முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில் , உரிமைத்தொகை வழங்குவதற்காக ஏ.டி.எம் கார்டு எங்கள் பகுதியில் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் அனைவரும் தினக்கூலிக்கு சித்தாள் வேலை,தட்டு வண்டியில் காய்கறி விற்பவர்கள்,எங்களது கணவர்களிடம் இதே போன்று பணிக்கு தான் தான் சொல்கிறார்கள்.சொந்த வீடு உள்ளவர்களுக்கு கூட கன்பர்மேஷன் வந்துவிட்டது ஆனால் எங்களுக்கு எந்த வித ஒடிபியும் வரவில்லை
,நேரில் வந்து யாரும் விசாரணை செய்யவும் இல்லை. சில குடும்பத் தலைவிகளுக்கு ஓரு ரூபாய் அனுப்பி சோதனை செய்து உள்ளனர். இன்னும் இந்தத் திட்டம் தொடங்க இரண்டு நாள் உள்ள நிலையில் பாரபட்சம் இன்றி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இப்பகுதி கவுன்சிலர் விஜயலட்சுமி பிரபல லாட்டரி விற்பனையாளர் எஸ்.வி.ஆரின் மகள்.இவர் பொதுமக்கள் பிரச்சனை எதற்கும் வரமாட்டார்.இவரது கணவர் சரவணன் எப்பவரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகளை அழைத்து பேசலாமே எனக் கூறியதற்கு அவர்கள் பாட்டுக்கு போராட்டம் செய்யட்டும் நீங்கள் செய்தியை எடுத்து செல்லுங்கள் என அலட்சியமாக கூறினார்.

ரேஷன் கடையை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.