Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிக்கு ஒரே நேரத்தில் புத்தம் புது 500 டிப்பர் லாரிகளை வாங்கியவரின் வீடு உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை.

0

 

மணல் அகழ்வு முறைகேடு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, மணல் விற்பனையில் பணமோசடி மற்றும் வரிஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

 

பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, திருச்சி, வேலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழக காவல்துறையின் பாதுகாப்பைக் கோரவில்லை என தெரிகிறது. அதேநேரத்தில், தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்த தகவல் மட்டும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ஆர் என அழைக்கப்படும் முத்துபட்டினம் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்திலும், வல்லத்திரக்கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் விற்பனையகத்திலும், திண்டுக்கல்லை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவு.

அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை. முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் சோதனை.

திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை.

கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல்.

திருச்சி மாவட்டம் கொண்டையம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் சோதனை. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை. புதுக்கோட்டை மாவட்ட தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே செம்மண் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை. சண்முகம் என்பவருக்குச் சொந்தமான குவாரியில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை. அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்.  கறம்பக்குடி கரிகாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

 

நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்க துறையினர் சோதனை. ஒருவந்தூர் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் எடுத்து குமரிபாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கில் வைத்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை

கூடுதல் விலைக்கு மணல் விற்பனை, ஆன்லைனின் முறைகேடாக பதிவு செய்து, வாகனங்களில் மணல் ஏற்றி விற்பனை என புகார்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் வீடுகளில் ஆட்கள் இல்லாததால் அதிகாரிகளுக்கு சிரமம். புகைப்படத்தை காட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள். வீராசாமி சாலை, குமரப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

யார் இந்த புதுக்கோட்டை ராமச்சந்திரன்?

2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிப்பை மோடி அறிவித்த நேரத்தில் ரூ.2000நோட்டு அப்போது தான் அறிமுகம் ஆகி இருந்தது.
அப்போதைய அதிமுக ஆட்சியில் பிரபலமாக பேசப்பட்ட ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான பல இடங்களில்பல இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை இணைந்து நடத்திய சோதனைகளில் ரூ.147 கோடி ரொக்கம் அதுவும் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகள், 178 கிலோ தங்கம் மற்றும் அவர் வீட்டில் ஆவணங்கள் அடிப்படையில் சிக்கியவர்கள் தான் புதுக்கோட்டை ராமச்சந்திரன் திண்டுக்கல் ரத்தினம்.

மணல் ஆறுமுகசாமி இடம் இருந்த மணல் குவாரிகளை இவர்கள் கைப்பற்ற பின்பு கோடிகளில் மிதந்தனர்.

ராமச்சந்திரன், செல்வம் ஆகியோரின் நிறுவனங்களில் நடந்த சோதனைகளை பல ஆவணங்களை அமலாக்கத்துறை அப்பொழுது கைப்பற்றியது.
சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோருடன் ராமச்சந்திரன், திண்டுக்கல் சர்வேயர் ரத்தினமும் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியில் திருச்சி பஞ்சுப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கத்தில் ரூ.121 கோடி செலவில் கிராவல் மண் அடிக்கும் பணிக்கு ஒரே நேரத்தில் புதிதாக 500 டிப்பர் லாரிகளை வாங்கியவர் ராஜேந்திரன்.

தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின் செந்தில் பாலாஜி வழக்கில் இவரது பெயர் அடிப்பட்டு அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது.

திருச்சி வாரிகளின் நடைபெற்ற சோதனை மாலை 7 மணி அளவில் முடிவுற்றது.மீண்டும் நாளை காலை அதிகாரிகள் சோதனையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.இன்றைய சோதனையில் மூன்றடி நல்ல வண்டி அம்மன் 10 அடிக்கும் மேலாக அள்ளப்பட்டுள்ளது. மேலும் போலி பில்கள் அரசு அதிகாரிகளின் போலி கையெழுத்து, உள்ளிட்டவை உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,மேலும் கோரியில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்பட்டதும் தெரிய வந்துள்ளது.மேலும் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருந்தும் செயல்படவில்லை.இங்கு பணி புரியும்
கேசியர் சரவணன், திருச்சி ராஜா ஆகியோர் விசாரணைக்காக அழைத்து சொல்லப்பட்டுள்ளனர்.மேலும் குவாரிகளுக்கு ரோடு போட்ட ஒப்பந்ததாரர் கனகராஜ் என்பவர் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் மல்லியம் பாளையம் குவாரியில் சோதனைக்கு அதிகாரிகள் வருகிறார்கள் என தெரிந்ததும் ஆழமாக மணல்களைத் தோண்டி வழியை மூடிவிட்டு ராஜேந்திரன் ஆட்கள் தலைமறைவாகி விட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.