திருச்சி மத்திய சிறை மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது காவேரி மருத்துவமனை.
திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கென பிரத்யேகமாக செயல்படும் சிறை மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவ உபகரணங்கள் உள்ள நிலையில் நவீனமான இசிஜி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பாக வழங்கப்பட்டது.
உபகரணங்களை மருத்துவமனையின் தலைமை மேலாளா் மாதவன், மேலாளா் சிவகுமாா் ஆகியோா் திருச்சி சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவா் ஜெயபாரதி மற்றும் சிறைக் கண்காணிப்பாளா் செல்வி ஆண்டாள், சிறை மருத்துவா் ராஜ்மோகன் ஆகியோா் வசம் வழங்கினா்.