சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 16 வயதுதான் ஆகிறது.. இந்த சிறுமியை 25 வயது இளைஞர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதனால், அந்த சிறுமியும் கர்ப்பமாகிவிட்டார்.
இந்த விஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.. இதனால், சேலம் மகளிர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் விஸ்வா.. கன்னியாகுமரி மாவட்டம் இருளபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பலாத்காரம்: சிறுமியை பலாத்காரம் செய்தது குறித்த விசாரணையை போலீசார் விஸ்வாவிடம் துவங்கினர்.. ஆனால், அவரிடமிருந்து வெளிவந்ததோ, ஏகப்பட்ட பெண்களுடன் புரிந்த லீலைகளும், அட்டகாசங்களும்தான்.
கடந்த 2022ம் ஆண்டு, கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார் விஸ்வா.. அப்போது அந்த கடையில் 21 வயது பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.. சாமல்பட்டியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. காதலிப்பதாக சொல்லி அவரிடம் நெருங்கியுள்ளார்.. ஆசைவார்த்தையும் சொல்லி உள்ளார்.. விரைவில் திருமணம் செய்ய போவதாக சொல்லி, அந்த பெண்ணுடன் உல்லாசமும் அனுபவித்தார்.. பிறகு அதே பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், கல்யாணம் ஆன நாளிலிருந்தே வேண்டுமென்றே தகராறுகளை அந்த பெண்ணிடம் செய்துள்ளார்.. நாளுக்கு நாள் சண்டைகள் வலுக்கவும், ஒருகட்டத்தில் விஸ்வா அந்த பெண்ணை தனியே விட்டுவிட்டு, வீட்டைவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்..
கிருஷ்ணகிரி: பிறகு, கிருஷ்ணகிரியில் உள்ள ஜூஸ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி ஜூஸ் கடைக்கு வந்துள்ளார்.. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், கணவனை விட்டு தனியாக வசித்து வருகிறார்..
அடிக்கடி ஜூஸ் கடைக்கு வந்து போகவும், விஸ்வாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது… வழக்கம்போல், விஸ்வா தன்னுடைய வலையை விரிக்க, அதில், விழுந்துவிட்டார் அந்த அபலைப்பெண்.. அவரையே திருமணம் செய்து கொள்வதாக சொல்லி நெருங்கி பேசியுள்ளார்.. இதை வைத்தே அவருடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பிறகு, இந்த பெண்ணையே 2வதாக திருமணமும் செய்து கொண்டார்.
தகராறுகள்: அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் பகுதியில், ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அந்த பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் விஸ்வா தங்க வைத்து கொண்டார். வழக்கம்போல், இந்த பெண்ணிடமும் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
அதேசமயம், பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண்ணையும் தன் வலையில் வீழ்த்தினார்.. அந்த பெண்ணுக்கு 40 வயதாகிறது.. 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. வயதுவந்த மகள் இருப்பது தெரிந்தும், 40 வயது பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துவங்கினார் 25 வயதுடைய விஸ்வா.
2வது மனைவி: இப்போது, பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடன் பழகும் சமாச்சாரம், 2வது மனைவிக்கு தெரிந்துவிட்டது. இதனால், மேலும் தகராறு வீட்டில் வெடித்தது.. விவகாரம் பெரிதாவதால், 2 பெண்களையும் ஒரே வீட்டில் வைத்து வாழ முடிவெடுத்தார். அதன்படி, இரண்டாவது மனைவி + அவரது 2 குழந்தைகள் + பக்கத்து வீட்டு ஆண்ட்டி + அவரது 16 வயது மகள் என மொத்த பேரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார் விஸ்வா..
ஒருகட்டத்தில் 2 பெண்களுக்கும் சண்டை வெடித்தது.. இதனால், 40 வயது பெண்ணையும், அவரது 16 வயது மகளையும், 2 தெரு தள்ளி, இன்னொரு வீடு எடுத்து அவர்களை குடி வைத்தார். 2 வீடுகளுக்குமே தினமும் சென்று வந்தார்.
சிறுமி கர்ப்பம்: இப்போது, விஸ்வாவுக்கு, ஆண்ட்டியின், 16 வயது மகள் மீது பார்வை திரும்பியது.. அம்மாவுக்கு தெரியாமல், அந்த சிறுமியிடமும் வலையை விரித்தார்.. திருமணமும் செய்து கொள்வதாக சத்தியம் செய்தார்.. சிறுமியுடனும் உல்லாசமாக பொழுதுகளை கழித்தார்.. இதில், சிறுமி கர்ப்பமானார்.
இந்த சிறுமிதான், மேலே சொன்ன அந்த 16 வயது சிறுமி.. இவரை கர்ப்பமாக்கியதால்தான், 40 வயது தாய் ஆத்திரமடைந்து மகளிர் போலீசுக்கு போனார்.. தன்னை சீரழித்ததுடன், தன் மகளின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டதால், ஆவேசமடைந்தது, விஸ்வா மீது இந்த புகாரை தந்தார்.. இதையடுத்து மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விஸ்வாவை போக்சோ வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.
இவை அனைத்துமே, இந்த ஒரு வருடத்தில் மட்டும் விஸ்வா செய்த லீலைகள் ஆகும்.. இதில், தாயும், மகளும் என 4 பெண்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர்..
அப்படியானால், இதற்கு முன்பு விஸ்வா வேறு எத்தனை பெண்களை நாசம் செய்துள்ளார்? 4 பேர் தவிர வேறு பெண்களுடனும் உறவு உள்ளதா? என்ற விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன..
கடந்த வருடம்தான் சேலத்துக்கு இவர் வந்துள்ளார். இதற்கு முன்பு சொந்த ஊரான கன்னியகுமரியில், இவர் செய்த சேட்டைகளும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது..
இதில், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து திருமணம் செய்த அந்த முதல் மனைவி, என்ன ஆனார் என்றே தெரியவில்லை.. நாகர்கோவில் காசிக்கே டஃப் தந்துள்ள விஸ்வா, இப்போது ஜெயிலில் உள்ளார்.