திருச்சி முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை சார்பில் ரோந்து பணி காவலர்களுக்கு முதல் உதவி சிகிச்சை பயிற்சி.
திருச்சி முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனையில்
ரோந்து பணி காவல்துறையினருக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி.
இந்திய எலும்பு மருத்துவ சங்கம் தோன்றிய நாளை முன்னிட்டு இந்திய எலும்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு எலும்பு மருத்துவர்கள் சங்கம், திருச்சி ஆர்த்தோ சொசைட்டி மற்றும் முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை இணைந்து உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சியினை
திருச்சி அண்ணாமலை நகர் முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனையில் இன்று நடத்தினர்..
மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். டாக்டர் முகேஷ் மோகன் கலந்து கொண்டு
திருச்சி புறவழி ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு, திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு டாக்டர் டாக்டர் முகேஷ் மோகன் மூலமாக செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை விரைவாக எவ்வாறு மீட்பது? என்பது குறித்த விவரங்களை தெரிவித்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளை கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயனை டாக்டர் முகேஷ் மோகன் வரவேற்றார்.