Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிரடாய் அமைப்பின் சார்பில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி திருச்சியில் இன்று முதல் 3 நாள் நடைபெறுகிறது.

0

'- Advertisement -

 

திருச்சியில் பேர்ப்ரோ
வீடுகள் கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது.

தற்போது 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

கண்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்து,மலர் வெளியிட்டார் கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.
தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு,
திருச்சி கிரடாய் அமைப்பு சேர்மன் கோபிநாதன், தலைவர் ரவி, பேர்ப்ரோ கமிட்டி தலைவர் மோகன் சீனிவாசன்.
அகில இந்திய கிரடாய் துணைத்தலைவர் (தெற்கு) ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரடாய் தலைவர் இளங்கோ, செயலாளர் ஆனந்த்,
கிரடாய் செயலாளர் மனோகரன், பொருளாளர் முகமது இப்ராகிம், ஃபேர் ப்ரோ செயலாளர் நசுருதீன், ஆலோசகர் ஷாஜகான்,இந்தியன் வங்கி துணைபொது மேலாளர் ஸ்ரீமதி,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் நவீன் குமார்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த
கண்காட்சியில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டிவீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெற முடியும். கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட படைப்புகளை 24 கட்டுமான நிறுவனத்தினர்களும்,, 6 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள்அலங்காரம், எலக்ட்ரிகல் போன்ற 8 நிறுவனங்களுடன் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகிறது. இங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் உள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.