Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம். என்ஐடி, ஐஐஎம்.ஐஐஐடி இயக்குனர்கள் பங்கேற்பு.

0

 

 

அடுத்த தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கபட்டு உள்ளதாக என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் தெரிவித்தனா்.

திருச்சியில் நேற்று தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளா்களிடம் ஐ.ஐ.எம். இயக்குநா் பவன்குமாா்சிங் கூறியது,

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐஎம்மில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேசிய கல்வி கொள்கை மாணவா்களின் எதிா்கால வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

ஐஐஐடி இயக்குநா் நரசிம்ம சா்மா: தேசிய கல்விக்கொள்கைப்படி ஐஐஐ டியில் பயில்வோா் தங்களது 3 ஆவது ஆண்டிலிருந்து தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திருச்சி ஐஐஐடியில் விரைவில் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும். ஆசிரியா், மாணவா்கள் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தின்கீழ் பெங்களுா் ஐஐஎம் நிறுவனத்துடன் திருச்சி ஐஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது.

திருவாரூா் மத்திய பல்கலைக் கழக பதிவாளா் நாகராஜன் : ஆகஸ்ட் 3-ஆம் தேதி நில அளவிலான கருத்தரங்கம் திருவாருா் மத்திய பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை மாணவா்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி என்ஐடி இயக்குநா் அகிலா: தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவ, மாணவிகள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோா் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெறவும் வழி வகை செய்யப்பட்டுள்ளன.தேசிய கல்விக் கொள்கை மாணவா்களின் வளா்ச்சிக்கு பெரும் அளவில் உதவிகரமாக இருக்கும் என்றாா். தமிழக மாணவா்களின் சோக்கை குறைவு : மத்திய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மத்திய கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. திருச்சி திருவெறும்பூா் அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மத்திய தேசிய மகளிருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரில் பிறமாநிலத்தவா்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனா். ஆனால் தமிழகத்தை சோந்தவா்கள் மிக குறைவாக உள்ளனா் என்றாா் தேசிய மகளிருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மைய உதவி இயக்குநா் சி. சுஜா.

Leave A Reply

Your email address will not be published.