தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் பச்சை மலையில் பசுமை நடை பயணம்.
தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள
கிழக்குத் தொடர்ச்சி மலையான பச்சைமலை சூழலியல் வளம் நிறைந்தது. அரியவகை தாவரங்கள் மரவகைகள், எங்கும் காணக் கிடைக்காத அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மூலிகைகள், பலா, அன்னாசி மற்றும் தானியங்கள் நிறைந்தது.
எல்லாக் காலங்களிலும் பசுமையான மலைவளம், தூய்மையானக் குளிர்க்காற்று, சுகாதாரமான வாழிடங்கள் அமைதியான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க பச்சைமலையில் செண்பகம் காளியம்மன் கோயில் திட்டுப்பகுதியில் 4 கிலோமீட்டர் பசுமை நடைப் பயணம் மேற்கொண்டனர்.
மூங்கில் வளங்களும் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளும் அடர் மரங்கள் சூழ் வனத்தினுள் பசுமைநடை மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியும், இயற்கையின் மகத்துவத்தையும் மாண்பையும் புரிந்துகொள்ளக் கூடிய அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்ற செயலாளர் பேரா.கி.சதீஷ் குமார் தலைமையேற்று அழைத்துச் சென்றார்.
மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் வித்யா, மாணவர் மன்ற பொறுப்பாளர் யுவராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.