சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவர் நள்ளிரவு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவை சாதாரணமாக படித்துக் கொண்டிருந்த போலீசாருக்கு, சிறிது நேரத்திலேயே தலை சுற்றியது. அப்படி என்ன இருந்தது அந்த புகாரில்?
கன்னிகாபுரத்தைச் சேர்ந்த அந்த நபரின் வீட்டில், தாம்பரத்தைச் சேர்ந்த உறவுக்காரப் சிறுமி ஒருவர், கடந்த 3 நாட்களாக தங்கியுள்ளார். 17 வயதுடைய அந்த சிறுமி, தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.
சந்தேகம் கொண்ட அந்த நபர், ‘ஏம்மா. இவ்வளவு லேட்ட வர்ற? என்ன காரணம்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமியோ, ‘வரும் வழியில் தன்னை 2 பேர் கற்பழித்துவிட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வர கொஞ்சம் தாமதமாகிவிட்டதாகவும்’ கூலாக கூறியுள்ளார்.
அதை கேட்ட உறவினருக்கு தூக்கி போட்டுள்ளது. ‘என்னது கற்பழிச்சிட்டாங்களா? என்னம்மா சொல்ற?’ என அலறியடித்து, அதன் பிறகு தான் புகாரோடு புளியந்தோப்பு காவல்நிலையத்திற்கு வந்துள்ளார் அந்த நபர்.
தன்னுடைய அதிர்ச்சியை போலீசார் தலையில் இறக்கி வைத்த அந்த நபர், அதன் பின் கொஞ்சம் ரெகுலர் ஆனார். ஆனால், போலீசாருக்கோ தலை சுற்றி விட்டது. உடனே சம்மந்தப்பட்ட 17 வயது சிறுமியை சந்தித்த காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் அழகேசன் உள்ளிட்ட போலீசார், சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பரிசோதனை முடிந்து டாக்டர் வந்து சொன்ன தகவல், அதை விட அதிர்ச்சியாக இருந்தது. சிறுமி கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், அவர் உடம்பில் அதற்கான எந்த சான்றும் இல்லை என்றும், அதே நேரத்தில் சிறுமி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார் என்றும் கூறினார் டாக்டர்.
அதன் பிறகு விழித்துக் கொண்ட போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்த தொடங்கினர். அப்போது தான் சிறுமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
அந்த சிறுமி, புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் 18 வயது தோழியுடன் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த 17 வயது தோழி ஒருவருடன் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுடன் கடந்த 3 நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்ததை கூறினார்.
சம்மந்தப்பட்ட அந்த மூன்று சிறுமிகளும், தங்களுக்கு தெரிந்த சிறுவர்கள், வாலிபர்களை மொபைல் போனில் அழைத்து தொடர்ந்து பாலியல் இன்பம் அனுபவித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சிறுமிகளிடம் உல்லாசமாக இருந்ததாக, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது பாஸ்கர், 19 வயது தனுஷ், 21 வயது சஞ்சய், 19 வயது மற்றொரு தனுஷ் மற்றும் 15 மற்றும் 17 வயதுடைய 6 சிறுவர்கள் என 11 பேரை கைது செய்தனர்.
கைதான 11 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் சிறுமிகளிடம் உல்லாசமாக இருந்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேஜர் இளைஞர்களான 5 பேரை புழல் சிறையிலும், மைனர் சிறுவர்களான 6 பேரை கெல்லீசில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர்.