தெருக்களை குப்பைகளாக ஆக்கும் சமூக விரோதிகளை திருத்த, 47-வது வார்டில் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி.
மாநகராட்சியில் மட்டுமல்ல நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்னவென்றால் தெருக்களில் தூக்கி எறியப்படும் குப்பைகள், முக்கியமாக தின்பண்டங்கள்.
பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தாலும், சில சமூக விரோதிகள் யாருக்கும் தெரியாமல் குப்பைகளை தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.
மீதியான தின்பண்டங்களை தெருக்களில் தூக்கி எறிவதால், தெரு நாய்கள் அவற்றை பல இடங்களில் இழுத்துச் செல்கிறது.
கடைசியில் அத்தனை குப்பைகளையும் துப்புரவு பணியாளர்களே கைகளால் அள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் பணியாளர்களின் வேலை நேரமும், பளுவும் அதிகரித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 47 வது வார்டில், பொன்மலை
ஜீ கார்னர் சர்வீஸ் ரோட்டில், அடிக்கடி தூக்கி ஏறிப்படும் குப்பைகளை, அகற்றுவதற்கும் மேலாக, இன்று அங்கு செடிகளை நட்டு தங்கள் கைகளாலே பதாகைகளையும் எழுதி வைத்துள்ளனர்.
அனைவரும் நம்மைப் போன்றவர்களே என்று எண்ணம் கொண்டு, நம்மால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில், குப்பைகளை தெருக்களில் தூக்கி எறியாமல், நமது பணியாளர்களிடமே வழங்கி, நமக்காக பணியாற்றும் அவர்களின் பணி சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி எடுத்த 47 வது வார்டு கவுன்சிலரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான செந்தில்நாதனின் இந்த முயற்சிக்கு வார்டு பொதுமக்கள் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.