Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து கலைஞர் சுடர் தொடர் ஓட்டம்.அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

0

'- Advertisement -

 

 

Ad banner

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூரில் கலைஞா் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட, கிழக்கு மாநகர மாவட்ட மாணவா் அணி சாா்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையிலிருந்து நேற்று மாலை கலைஞா் சுடா் தொடா் ஓட்டம் புறப்பட்டது.

இதனை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த சுடா் தொடா் ஓட்டமானது திருவெறும்பூா், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சாவூா், அம்மாபேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூரைச் சென்றடைகிறது. திருவாரூா் விழாவில் பங்கேற்கவுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கலைஞா் சுடா் வழங்கப்பட உள்ளது என திமுக நிா்வாகிகள் தெரிவித்தனா். முன்னதாக, நிகழ்வில் திரளான திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.