திருச்சி உறையூரில்
மது அருந்திய பின் தயிர் சாதம் சாப்பிட்டவர் பரிதாப சாவு.
திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சேஷாசலம்
(வயது 51). இவருக்கு திருமணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. குடிப்பழக்கம் உடையவர்.
சம்பவத்தன்று குடும்ப தகராறில் மது அருந்தி உள்ளார். பின்னர் தயிர் சாதம் சாப்பிட்டு உள்ளார்.தயிர் சாதம் சாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது சகோதரர் ராஜேஷ் கண்ணா கொடுத்த புகாரியின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.