திருச்சி மேல சிந்தாமணி நாடார் தெருவில் தொழிலதிபர் இன்ஜினியர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரும் புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு தலைவருமான
சகாதேவ பாண்டியனின் திருஉருவ படத்திறப்பு விழா திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சகாதேவ பாண்டியன் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி பின் பொது மக்களிடையே சகாதேவ பாண்டியின் பெருமைகளை எடுத்துக் கூறினார்.
பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள கோயில் குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார் ப.குமார்.
இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஜெ.சீனிவாசன்,
மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் மற்றும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.