திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்ஜிஆர் மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களால், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
கழக தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ,மாவட்ட அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில்
டாக்டர் எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் திருச்சி மாநகரிலுள்ள அண்ணா,பெரியார் பெரும்பிடுகு முத்தரையர், வ.உ. சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள்,நகர கழக நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.