
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸார், எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ச. நந்தகுமார் (வயது 23) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 1,300 கிராம். கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 13,000 ஆகும்.