திருச்சியில் கார் மற்றும் பஸ்ஸில் அடிபட்டு கூலி தொழிலாளி பலி.
விழுப்புரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிரத்தினம் (30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்காக பேருந்து மூலம் திருச்சி வந்தார். அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று போது அதே வழியாக வந்த கார் மணிரத்தினம் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே வழியாக வந்த பேருந்து ஒன்றில் அடியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.