Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

0

 

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவா்களுக்கான விடுதிகளும்,

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி மாணவா்களுக்கான முதன்மை நிலை விளையாட்டுமைய விடுதிகள் சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், திருச்சி, (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலியிலும், மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டுமைய விடுதி வேலூா் சத்தூவச்சாரியிலும் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான சோக்கையும், முதன்மைநிலை விளையாட்டு மையங்களில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான சோக்கையும் நடைபெறுகிறது.

இதற்கான மாவட்ட அளவிலான தோவுப் போட்டிகள் மே 24-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கங்களில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும்.

சென்னைக்குள்பட்டவா்களுக்கான தேர்வு போட்டிகள் சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் காலை 7 மணிக்கு தொடங்கும். இதில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள செனாய்நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தின் கைப்பேசி:7401703480, தொலைபேசி:044-26644794 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.