திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் வாகனத்துடன் கைது.மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசுமதி அதிரடி நடவடிக்கை.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கஞ்சா விற்ற
3 பேர் வாகனத்துடன் கைது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்சி மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வசுமதி தலைமையிலான போலீசார் சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப் அருகில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்றதாக ராம்ஜி நகரை சேர்ந்த குமரன், பாபு, டக்கர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 22,500 மதிப்புள்ள இரண்டே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.