வேலை கிடைக்காத விரக்தி;
திருச்சியில் பி.டெக் படித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி சின்ன சவுக் காசுயப்ப ராவுத்தர் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்
(வயது 23)இவர் தஞ்சாவூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பிடெக் கட்டிடக்கலை படிப்பு முடித்துள்ளார்.
அதன் பின்னர் பல இடங்களில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசறி கொக்கியில் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.