Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர பொதுமக்கள் விரும்புகின்றனர். அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி பேச்சு.

0

 

பாராளுமன்ற தேர்தலோடு
சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்

எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி பேச்சு.

திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திருச்சி மலைக்கோட்டை சறுக்கு பாறையில் நடைபெற்றது. பகுதி செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் ஜெயபால், ரவி சகாபுதீன் செல்வம், ஜானகி, மாவட்ட துணை
 யலாளர் கருமண்டபம் பத்மநாதன், ஐயப்பன், கேசி பரமசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும். எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளருமான என்.ஆர்.சிவபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, தற்பொழுது எடப்பாடியார் போன்ற தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் திமுக தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும், திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக தற்பொழுது 12 மணி நேரம் வேலை மசோதா சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்தார்கள்.
ஆனால் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்ட மசோதாவை திரும்ப பெற்று விட்டனர்.பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஆனபோது அவருக்கு பல்வேறு சோதனைகள் வந்தது அதனை சாதனையாக மாற்ற பொது செயலாளர் ஆனால் அதுபோல எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு சோதனைகளை சாதனையாக்கி பொது செயலாளராக வந்தார்.
இன்றைக்கு திமுக முப்பதாயிரம் கோடி ஊழல் செய்து உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் வழங்குவதாகக் கூறியுள்ளனர், நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து அறிவித்துள்ளனர். திமுக ஆட்சி தொடர மக்கள் வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.


எனவே பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். பதிலடி கொடுக்க வேண்டும்.மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர நாம் அனைவரும் இந்த தினத்தில் சபதம் ஏற்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்,
முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பேசும் போது இன்று பொதுமக்கள் திமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று மனம் வருந்துகிறார்கள். காரணம் அந்த அளவிற்கு பொதுமக்கள் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி,தண்ணீர் வரி, மின் கட்டண உயர்வு இப்படி பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறார்கள்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் அப்படியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள்தினமும் வாகனங்களில் செல்லும்போது அவதிப்பட்டு வருகின்றனர்.
எப்படி 2 ஜி ஊழலில் சிக்கி திமுக ஆட்சி போனதோ அதே நேரத்தில் 30000 கோடி ஊழல் பிரச்சனையில் சிக்கி இந்த ஆட்சி போகும்.வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி யார் வலுவான கூட்டணியை அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா, முன்னாள் மாவட்ட செயலாளருமான மனோகரன் பேசும் பொழுது தமிழகத்தில் எப்படி மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது பொதுமக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.இது குறித்து சட்டமன்றத்தில் நமது எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் கேள்வி கேட்டால் அதற்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியவில்லை.
மாநகராட்சியைப் பொறுத்தவரை 65 வார்டுகளிலும் குழி தோண்டப்பட்டு பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் எப்பொழுது தேர்தல் வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வருகின்ற பாராளுமன்ற ஆச்சரியத்துடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் ஒன்றுமில்லை.
வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
அதிமுக கட்சியை வலிமையோடும், பொழிவோடும் நடத்தி செல்கின்ற எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்து தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியாரை வர பாடுபட வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் ஆவின் சேர்மேனனும், மாணவரணி செயலாளருமான என்ஜினியர் கார்த்திகேயன் பேசும் போது திமுக அரசு தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எடப்பாடியார் செயல்படுத்தி வந்தார் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போட்டார்கள்.
இன்றைக்கு திமுக மிகப்பெரிய அளவில் ஊழல் செய்து இருப்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.இதனை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள் மக்கள் புரட்சி வந்தால் இந்த திமுக ஆட்சி அகற்றப்பட்டு விடும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்
எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி, பலமான அணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று எடப்பாடி யாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, கலைவாணன், தென்னூர் அப்பாஸ், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக் மிரா.தொழிலதிபர்இப்ராஹிம்ஷா, வக்கீல்கள் சுரேஷ், தாமரை செல்வம், ஜெயராமன், கங்கை
செல்வன் ராமச்சந்திரன், ஈஸ்வரன்,கல்லுக்குழி முருகன், டைமன் தாமோதரன்
,டாஸ்மாக் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிளாட்டோ,செந்தில்குமார்.அன்பு செழியன்,நாகராஜ், மற்றும் கலீலுல் ரகுமான், சதீஷ்குமார், ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன்,ஐடி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, எம்
. பழனி யப்பன், கிருஷ்ணன்,
பொன்ராஜ், ஜெகதீசன், கதிர்வேல், தர்கா காஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.