திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதனை நியமித்தார் டிடிவி.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த ஆர். மனோகரன் அதிமுகவில் ஐக்கியமானார்.
இதனைத் தொடர்ந்து கழக இளைஞர் பாசறை தலைவராக பணியாற்றி வந்த 47வது கவுன்சிலர் செந்தில்நாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார் என நிறுவன தலைவர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 47 வது வார்டு பொதுமக்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்களிடையே கட்சி பாகுபாடு இன்றி செயல்பட்டு வரும் செந்தில் நாதனுக்கு மேலும் கட்சியில் தற்போது பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் நாதனுக்கு பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் மே தினம் போனிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.